ஜி.வி.பிரகாஷ் படத்தில் வடிவேலு

201609251713566520_vadivelu-act-gv-prakash-movie_secvpfசந்தானத்தை வைத்து ‘தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கிய ராம்பாலா அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது நிறைய படங்கள் உருவாகி வருவதால், அப்படங்கள் முடிந்தபிறகு இப்படத்தை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர்கள் தேர்வை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தற்போது இப்படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகியுள்ளது செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாகவும், அதற்கான தேடுதல் படலம் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

வடிவேலு காமெடியனாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ள ‘கத்திசண்டை’ படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது. இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். விஷால், தமன்னா, சூரி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இதையடுத்து, பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்-ரித்திகா சிங் நடிப்பில் உருவாகும் ‘சிவலிங்கா’ படத்திலும் காமெடியனாக நடிக்கவுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilCinema.News - Latest Cinema News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online